Paristamil Navigation Paristamil advert login

கப்ரியல் அத்தால்.. ஐந்தாம் குடியரசின் இரண்டாவது குறுகியகால பிரதமர்..!!

கப்ரியல் அத்தால்.. ஐந்தாம் குடியரசின் இரண்டாவது குறுகியகால பிரதமர்..!!

17 ஆடி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 3626


பிரான்சில் - ஐந்தாம் குடியரசின் முதல் இரண்டு குறுகியகால பிரதமர்களும் - ஜனாதிபதி மக்ரோனின் ஆட்சிக்காலத்திலேயே பதவிவகித்திருந்தனர்.

நேற்று பதவி விலகியிருந்த கப்ரியல் அத்தால், ஐந்தாம் குடியரசின் இரண்டாவது குறுகியகால பிரதமராவார். அவர் ஆறு மாதங்களும் ஏழு நாட்களும் பிரதமராக கடமையாற்றியுள்ளார்.

அவருக்கு அடுத்ததாக François Mitterrand ஜனாதிபதியின் பிரதமராக இருந்த Edith Cresson மொத்தமாக 10 மாதங்களும் 17 நாட்களும் பிரதமராக பதவிவகித்திருந்தார்.

Charles de Gaulle ஜனாதிபதியின் ஆட்சியின் போது பிரதமராக Maurice Couve de Murville, 11 மாதங்களும் 10 நாட்களும் பதவி வகித்திருந்தார்.

ஜனாதிபதி François Mitterrand இன் பிரதமராக Pierre Bérégovoy, 11 மாதங்களும் 27 நாட்களும் பதிவி வகித்திருந்தார்.

இந்த பட்டியலில் முதல் இடத்திலும், ஐந்தாம் குடியரசின் மிக குறுகிய காலம் பிரதமராக இருந்தவருமாக Bernard Cazeneuve 5 மாதங்களும் 8 நாட்களும் கடமையாற்றிருந்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்