Paristamil Navigation Paristamil advert login

திருகோணமலையில் நபர் ஒருவர் காருடன் எரித்துக்கொலை

திருகோணமலையில் நபர் ஒருவர் காருடன் எரித்துக்கொலை

15 ஆடி 2024 திங்கள் 16:15 | பார்வைகள் : 1012


 திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவர் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் 42 வயதுடைய ஆண் ஒருவரே எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இவர்  இறுதியாக மொரவெவ பகுதிக்கு வந்ததாக கிடைத்த தகவல் கிடைப்பெற்றுள்ளது. 

அதன் அடிப்படையில் அவர் பயணித்ததாக கூறப்படும் வாகனம் கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் வில்கம் விகாரைப்பகுதியை கடந்து பயணித்துள்ளதை அப்பகுதியில் இருந்த சி.சி.ரி.வி காணொளி மூலம் கண்டறிந்தனர்.  

அதன் பின்னர் குறித்த வாகனம் மொராவெவ பகுதிக்கு வராத நிலையில் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்கள். 

இதன்போதே பன்மதவாச்சி காட்டுப் பகுதியில் இவர் பயணித்ததாக கூறப்படும் வாகனத்துடன் எரிக்கப்பட்ட நிலையில் இவருடைய  சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் இவருடைய உறவினர்கள் உட்பட பலரிடம் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்