Paristamil Navigation Paristamil advert login

■ மகிழ்ச்சியான செய்தி... மின்சாரக்கட்டணம் விலையேற்றம் இல்லை!!

■ மகிழ்ச்சியான செய்தி... மின்சாரக்கட்டணம்  விலையேற்றம் இல்லை!!

15 ஆடி 2024 திங்கள் 17:14 | பார்வைகள் : 10664


ஓகஸ்ட் 1 ஆம் திகதி மின்சாரக்கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக எரிசக்தி ஆணையம் (Commission de régulation de l'énergie) அறிவித்துள்ளது.

அரசாங்கம் தற்போது நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதால், மேலும் நிலமைகளை இறுக்கத்துக்குள் தள்ள விரும்பாத மக்ரோனின் அரசாங்கம், இந்த விலையேற்றத்தை விரும்பவில்லை என  தெரிவிக்கப்படுகிறது. ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் 1% சதவீதத்தால் மின்சாரக்கட்டணம் அதிகரிப்புக்கு உள்ளாகும் என இம்மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. 22 மில்லியன் குடும்பங்கள் இந்த விலையேற்றத்தை சந்திக்க இருந்தன.

இந்நிலையில், அந்த விலையேற்ற திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இன்று திங்கட்கிழமை எரிசக்தி ஆணையம் அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்