ஊடக சந்திப்பில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மக்ரோன்..!
12 ஆனி 2024 புதன் 05:12 | பார்வைகள் : 11372
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று ஜூன் 12, புதன்கிழமை ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்கிறார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, இறுதி நிமிடத்தில் பிற்போடப்பட்டிருந்தது. அதையடுத்து இன்று நண்பகலின் பின்னர் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற உள்ளது.
இம்மானுவல் மக்ரோன், சட்டமன்றம் கலைக்கப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார். அத்தோடு புதிய பொதுத்தேர்தல் ஒன்றையும் அறிவித்திருந்தார். இந்நிலையில், இரண்டு கட்டங்களாக ஜூன் 30 ஜூலை 7 ஆம் திகதி இந்த பொது தேர்தல் இடம்பெறும் எனவும் அறிவித்திருந்தார்.
ஏற்கனவே ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற Rassemblement national கட்சி இந்த பொது தேர்தலிலும் பெரும்பான்மை வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, ஜனாதிபதி மக்ரோன் இன்று பல முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொள்கிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan