Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : சிகரெட்டுக்காக தாக்குதல்.. கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஒருவர் உயிருக்கு போராட்டம்..!!

பரிஸ் : சிகரெட்டுக்காக தாக்குதல்.. கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஒருவர் உயிருக்கு போராட்டம்..!!

27 ஆனி 2024 வியாழன் 15:42 | பார்வைகள் : 8210


நபர் ஒருவர் கழுத்தில் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகரெட் ஒன்றுக்காக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு இச்சம்பவம் பரிஸ் 17 ஆம் வட்டாரத்தின் Rue de la Jonquière வீதியில் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் வீதியில் நின்றிருந்த போது அவரை, மூன்று பேர் கொண்ட குழு நெருங்கியுள்ளது. அவரிடம் சிகரெட் ஒன்றை கோரியுள்ளனர். ஆனால் அவர் சிகரெட் தர மறுத்துள்ளார்.

அதையடுத்து, குறித்த மூவரில் ஒருவர் கத்தி ஒன்றினால் தாக்கியுள்ளார். 15 செ.மீ நீளமுடைய கத்தி ஒன்றினால் கழுத்தில் தாக்கப்பட்டதில், அவர் படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் அவசர இலக்கத்துக்கு அழைக்கப்பட்டு Pitié-Salpêtrière மருத்துவமனையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதலாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்