Coco இணையத்தளம் மூடப்பட்டது... உரிமையாளர் கைது!
25 ஆனி 2024 செவ்வாய் 17:13 | பார்வைகள் : 17002
பல்வேறு குற்றச் செயல்களுக்கு பின்னணியாக இருந்த Coco இணையத்தளம் முற்று முழுதாக முடக்கப்பட்டு, அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Coco இணையத்தளமானது காதலர்களுக்கான இணையத்தளமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர், அது பாலியல் தொழிலுக்கான வாடிக்கையாளர்களை பிடித்துக்கொள்ளும் தளமாக மாறியது.
அந்த தளம் மீது எண்ணற்ற வழக்குகள் பதிவானதை அடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த இணையத்தளத்தின் உரிமையாளர் பிரான்சுக்கு சொந்தமான தீவு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரது மனைவி Var மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அதையடுத்து குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டது. இதனை உள்துறை அமைச்சர் Gérald Darmanin உறுதிப்படுத்தியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan