Yvelines : பேருந்தை திருட முற்பட்ட இளைஞன் கைது..!
15 ஆனி 2024 சனி 16:31 | பார்வைகள் : 8700
பேருந்து ஒன்றை திருட முற்பட்ட 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Carrières-sous-Poissy (Yvelines) நகரில் வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Keolis நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்றை குறித்த இளைஞன் திருட முற்பட்டுள்ளார். தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றை நள்ளிரவு 1.30 மணி அளவில் திருட முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரிப்பிட பாதுகாவலர் அவரை அடையாளம் கண்டு, காவல்துறையினரை அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் முன்னதாக 2022 ஆம் அண்டிலும் பேருந்து ஒன்றை திருடியிருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan