பரிஸ் : அமெரிக்க பெண் சுற்றுலாப்பயணியை தாக்கிய நால்வர் கைது!!

12 ஆனி 2024 புதன் 16:27 | பார்வைகள் : 15333
அமெரிக்க பெண் சுற்றுலாப்பயணி ஒருவரை தாக்கி, அவரிடம் இருந்து கொள்ளையடிக்க முற்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள place de Varsovie சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவரை வழிமறித்த நால்வர் கொண்ட குழு, அவரை தாக்கி அவரிடம் இருந்து நெக்லஸ் நகையினையும், பயண அட்டையையும் பறிமுதல் செய்தனர்.
அவர் தாக்கப்பட்டதில் அவரது தோள் மூட்டு விலகியுள்ளது. அவர் உடனடியாக Georges Pompidou மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தாக்குதல் இடம்பெற்ற சில நிமிடங்களில், குறித்த நான்கு கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் 13 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025