இலங்கையில் சீரற்ற காலநிலையால் நால்வர் மரணம்
23 வைகாசி 2024 வியாழன் 09:51 | பார்வைகள் : 6968
இலங்கையில் தொடர்ச்சியாக நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையின் பொருட்டு இதுவரையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இமதுவ, ராஸ்ஸகல ,மாதம்பே மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் உள்ள 67,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan