ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை தாக்குதலுக்கு தயாரான ஒருவர் கைது!
23 வைகாசி 2024 வியாழன் 09:39 | பார்வைகள் : 5241
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தாக்குதல் ஒன்றை நிகழ்த்துவதற்கு தயாரான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
Bordeaux நகரில் வசிக்கும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று மே 23, வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் ஒலிம்பிக் தீபம் எடுத்துவரப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், விரைவில் Bordeaux நகருக்கும் கொண்டுசெல்லப்பட உள்ளது. அதன்போது தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள குறித்த நபர் திட்டமிட்டுள்ளார்.
Eysines (Gironde) நகரில் வசிக்கும் 26 வயதுடைய குறித்த நபர் மே 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.