அஜித்துக்காக அனிருத் செய்த தரமான சம்பவம்..!
21 வைகாசி 2024 செவ்வாய் 13:31 | பார்வைகள் : 1947
அஜித் நடித்த ‘வேதாளம்’ திரைப்படத்திற்கு இசையமைத்த இசை அமைப்பாளர் அனிருத் ’ஆலுமா டோலுமா’ என்ற சூப்பர் ஹிட் பாடலை கம்போஸ் செய்த நிலையில் மீண்டும் அஜித்துக்காக அதேபோன்ற ஒரு அட்டகாசமான பாடலை கம்போஸ் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ‘வேதாளம்’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இந்த படத்தில் இடம்பெற்ற 'ஆலுமா டோலுமா’ என்ற சூப்பர் ஹிட் பாடல் என்பது தெரிந்தது. இந்த பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனது என்பதும் பலர் இந்த பாடலுக்கு ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் என்றும் அவை வைரல் ஆகியது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ’ஆலுமா டோலுமா’ பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆக இருக்கும் நிலையில் இப்போதும் இந்த பாடலை கேட்டால் எழுந்து ஆட்டம் போடும் வகையில் தான் இருக்கும். இந்த நிலையில் தற்போது அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், ஒரு ஆட்டம் போட வைக்கும் பாடலை கம்போஸ் செய்திருப்பதாகவும் ’ஆலுமா டோலுமா’ பாடலை விட இரு மடங்கு இந்த பாடலின் வேகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
’விடாமுயற்சி’ படத்தின் இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்றும் இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி இசை ரசிகர்கள் அனைவருக்கும் விருப்பமான பாடலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் ஜோடியாக த்ரிஷா நடித்து வரும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் அர்ஜூன், ஆரவ் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் இறுதியில் நடைபெற இருப்பதாகவும் இந்த ஆண்டு இ