பரிஸ் : வீட்டை உடைத்து €300,000 பெறுதியுடைய நகைகள் கொள்ளை!
21 வைகாசி 2024 செவ்வாய் 13:09 | பார்வைகள் : 4327
பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றை உடைத்து, அங்கிருந்து €300,000 பெறுமதியுடைய நகைகள், கடிகாரங்கள் போன்றன கொள்ளையிடப்பட்டுள்ளன.
Place de l'Europe பகுதியில் வசிக்கும் 65 வயதுடைய ஓய்வூதியம் பெறும் ஒருவரது வீடு, ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையர்களால் உடைக்கப்பட்டது. வீட்டில் உரிமையாளர் இல்லாத நிலையில், வீட்டுக்குள் இருந்த பாதுகாப்பு பெட்டகம் ஒன்றை உடைத்து, அதிலிருந்த பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றனர்.
மாலை 7 மணியில் இருந்து இரவு 11 மணிக்குள்ளாக இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12.30 மணிக்கு வீடு திரும்பிய உரிமையாளர், வீடு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து, காவல்துறையினரை அழைத்துள்ளார்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.