ஈரான் ஜனாதிபதியின் மரணம்: இலங்கையில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி

21 வைகாசி 2024 செவ்வாய் 11:29 | பார்வைகள் : 6220
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைஸியின் மரணத்தையொட்டி இலங்கையில் துக்கிய தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அரச திணைக்களங்களில் இலங்கையின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
தேசிய துக்க தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் விடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு துக்கதினமாக அறிவித்து தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் விடுமாறு அறிவித்திருந்தது.
அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் உட்பட அரச திணைக்களங்களில் இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025