யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி
21 வைகாசி 2024 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 7224
யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில், திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அளவெட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான வீரசிங்கம் தயானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
அளவெட்டி வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பபழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan