உடலில் கூடுதலாக 4 முலைக்காம்புகளை இணைத்துக் கொண்ட விச்சித்திர மனிதன்....!
21 வைகாசி 2024 செவ்வாய் 10:04 | பார்வைகள் : 1105
அமெரிக்காவில் நபரொருவர் தனது உடலில் அறுவை சிகிச்சை மூலம் கூடுதலாக 4 முலைக்காம்புகளை (Nipple) இணைந்துக் கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் ஹாரி ஹூஃப்க்ளோப்பன் என்ற நபர் தனது உடம்பில் கூடுதலாக நிப்பிள்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வினோத ஆசை ஏற்பட்டுள்ளது.
இதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என அவர் செயற்கை முறையில் உடலில் மாற்றம் செய்யும் நிபுணரான ஸ்டீவ் ஹாவொர்த்தை அணுகியுள்ளார்.
இதன்படி ஸ்டீவ் இயற்கையான ஆண் நிப்பிள்களைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நான்கு சிலிகான் நிப்பிள்களை ஹாரியின் உடம்பில் பொருத்த்தியுள்ளார்.
அதன்பின் அறுவை சிகிச்சை காயங்கள் குணமடைந்த பின் கொலராடோவைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் ஏஞ்சல் என்பவரிடம் சென்ற ஹாரி, தனது உடம்பில் புதிதாக பொறுத்தப்படுத்த சிலிகான் நிப்பில்கள் இயற்கையாகத் தோன்றும் வகையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.
ஹாரியின் வீடியோவை பகிர்ந்த டாட்டூ கலைஞர் ஏஞ்சல், இந்த செயல்முறை மிகவும் எளிதான, சிக்கலற்ற முறைதான் என்று விளக்கினார்.
இது வினோதமாகத் தோன்றினாலும் இந்த வகையிலான செயற்கை இம்பிளான்ட்கள் மற்றும் பச்சை குத்துதல் மூலமும் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு தங்களின் உடல் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.