■ அவதானம்... இரண்டில் ஒரு RER B..!!

19 வைகாசி 2024 ஞாயிறு 16:14 | பார்வைகள் : 16238
வரும் செவ்வாய்க்கிழமை மே 21 ஆம் திகதி, தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை அடுத்து, RER B சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட உள்ளன.
இரண்டில் ஒரு சேவை (50% சதவீதமானவை) மட்டுமே இயங்கும் எனவும், இயக்கப்படும் சேவைகளும் காலதாமதத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Gare du Nord - Charles de Gaulle Airport/Mitry Caye நிலையங்களில் இரண்டில் ஒரு சேவைகளும், Gare du Nord இல் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் சேவைகளில் மூன்றில் இரண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Gare du Nord நிலையத்தின் உள்ளக இணைப்பு (L'interconnexion) தடைப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மொத்தமாக Sud-Rail, la CGT-Cheminots மற்றும் l'UNSA ஆகிய தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அன்றைய தினம் இல் து பிரான்சுக்குள் பல்வேறு தொடருந்து சேவைகள் தடைப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1