Paristamil Navigation Paristamil advert login

RER D தொடருந்தில் வைத்து இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்..!

RER D தொடருந்தில் வைத்து இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்..!

19 வைகாசி 2024 ஞாயிறு 16:34 | பார்வைகள் : 4076


RER D தொடருந்தில் வைத்து 25 வயதுடைய இளைஞன் ஒருவர் கத்திக்குது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

நேற்று மே 18, சனிக்கிழமை இச்சம்பவம் Châtelet-les-Halles மற்றும் Gare de Lyon நிலையங்களுக்கிடையே பயணித்துக்கொண்டிருந்த RER D. தொடருந்தில் இடம்பெற்றுள்ளது.  32 வயதுடைய ஒருவர், குறித்த இளைஞனை கத்தியால் தாக்கியுள்ளார். பயணிகளின் கண் முன்னே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

தாக்குதலாளியை தப்பிச் செல்ல விடாமல் பயணிகள் மடக்கிப் பிடித்தனர். அதையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். 

படுகாயமடைந்த இளைஞன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

 

அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்