மழை
19 வைகாசி 2024 ஞாயிறு 15:06 | பார்வைகள் : 1819
பல நாட்கள் தொடர்ந்து பெய்யும் மழையால்
சமையல் அரை ஜன்னலருகே ஒருகவளம்
தயிர் சோறுக்கு மதியம் பன்னிரண்டு மணிக்கு
தவறாமல் வரும் காக்கை ஜோடி எங்கோ
காணாமல் போயின பாவம்
இரவில் தெருக் காவலராய் இருந்து
நள்ளிரவு முதல் அதிகாலை வரை
விட்டு விட்டு குறைத்து ரோந்துவந்த
பழக்கமான தெருநாய்கள் காணாமல் போயின
பகலிலேயே இரவுபோல் இருட்டு
குட்டையிலிருந்து தவளைகள் கச்சேரி விட்டு விட்டு
இரவிலோ கேட்கவேண்டாம் மின்சாரம் இல்லை கும்மிருட்டு
பயத்திலேயே எதோ சாப்பிட்டுவிட்டு உறங்கப்போயாச்சு
ஆதிகால மனிதன் வாழ்வு சென்னை நகரிலே
அப்பாடி ம்ரிஞ்சாம் புயல் ஒருவழியாய்
நேற்றிரவு திசை மாறி போனதாம் மழையும் நின்றது
அதிகாலையில் அங்கும் இங்குமாய் சில
குயில் கூவ......காகங்கள் கரைய
பலநாள் கழிந்து கொஞ்சம் வெளிச்சமான
காலைப்பொழுது வந்தது
ஒருசில நிமிடங்கள் வந்து போய் மேகத்தில் ஒளிந்த பரிதி
இதோ பகல் பன்னிரண்டு மணி
என்வீட்டு சமையல் அரை அருகே வந்த
அந்த பழகிய காகம் ஜோடி....ஒரு காகத்தின்
அலகு சற்றே ஒடிந்து...!
தயிர் சாதம் கேட்டு வாங்கி சாப்பிட்டு போனதே....!
மழையே போய்வா.....மீண்டும் அடுத்த பருவம் திருப்பி வா
மேகமே கடல்பக்கம் போய்விடு
உன்னுள் காணாமல் போன கதிரவனைக் காட்டு
பரிதி