Paristamil Navigation Paristamil advert login

புதிய காஸா திட்டம் -  இஸ்ரேல் பிரதமருக்கு புதிய சிக்கல்

புதிய காஸா திட்டம் -  இஸ்ரேல் பிரதமருக்கு புதிய சிக்கல்

19 வைகாசி 2024 ஞாயிறு 14:59 | பார்வைகள் : 4888


புதிய காஸா திட்டத்தை ஒப்புக்கொள்ள வேண்டும், மறுத்தால் அமைச்சரவையில் இருந்து விலக இருப்பதாக அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் பிரதமருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இஸ்ரேலில் போர் தொடர்பில் உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர் Benny Gantz. 

இவரே தற்போது பதவி விலக இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

ஒப்புக்கொள்ளப்பட்ட புதிய காஸா திட்டத்தை பெஞ்சமின் நெதன்யாகு ஏற்க மறுத்தால், தமது கட்சி ஆதரவை கட்டாயம் திரும்பப்பெறும் என்றும் Benny Gantz வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

போருக்குப் பிந்தைய காஸா பிரதேசத்தின் நிர்வாகத்திற்கான திட்டம் ஜூன் 8 ஆம் திகதிக்குள் ஒருங்கிணைக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாவிட்டால், அவரது எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமைக் கட்சி கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகும் என ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமைச்சர் Benny Gantz வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

மேலும், ஒரு தசாப்தத்திற்கு முந்தைய நெதன்யாகு சரியானதைச் செய்திருப்பார். இன்று நீங்கள் சரியான மற்றும் தேச நலனுக்கான காரியத்தைச் செய்ய தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்ரேலிய மக்கள் உங்களை கவனித்து வருகிறார்கள். நீங்கள் சியோனிசம் அல்லது வெறுப்பு மனப்பான்மை, ஒற்றுமை அல்லது பிரிவுவாதம், பொறுப்பு அல்லது சட்டவிரோதத்திற்கு இடையே ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்.

மட்டுமின்றி அமைச்சர் Benny Gantz வெளியேற நேர்ந்தால், கடும்போக்கு அரசியல்வாதிகளால் பிரதமர் நெதன்யாகு உரிய முடிவை எடுக்க முடியாமல் போகும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

அமைச்சர் Benny Gantz குறிப்பிட்ட அதே கருத்தையே பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant-ம் முன்வைத்துள்ளார். 

அமைச்சர் Benny Gantz தற்போது 6 அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளார்.

அதில் காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலிய ராணுவத்தை வெளியேற்றுவது, காஸா பகுதியில் ஆட்சியை அமெரிக்கா, ஐரோப்பா, அரேபிய, பாலஸ்தீன நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும். 

பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்