Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கனடாவில் அதிகரிக்கும் புதிய சிக்கல்..!

கனடாவில் அதிகரிக்கும் புதிய சிக்கல்..!

19 வைகாசி 2024 ஞாயிறு 14:56 | பார்வைகள் : 9492


கனடாவின் சில பிராந்தியங்களில் சமீப ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்கள் சொந்தங்களால் கைப்பற்றப்படாமல் அரசாங்கமே பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிச்சடங்குகளுக்கான செலவு அதிகரித்துள்ளதன் காரணமாகவே, உறவினர்களின் உடல்களை கைப்பற்ற சொந்தங்கள் மறுப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலை அதிகரித்து வருவதால், குறைந்தது ஒரு பிராந்தியமாவது, புதிதாக பிணவறை கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

1998ல் 6,000 கனேடிய டொலராக இருந்த இறுதிச்சடங்கு செலவு தற்போது 8,800 கனேடிய டொலரை எட்டியுள்ளது.

கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோவில் கைப்பற்றப்படாத உடல்களின் எண்ணிக்கை 2023ல் 1183 என அதிகரித்துள்ளது. 

2013 இல் இது 242 என இருந்துள்ளது.

பொதுவாக உறவினர்களால் தங்கள் சொந்தங்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் கைப்பற்றப்பட்டாமலே உள்ளது. 

முதன்மை காரணம் பணமகவே உள்ளது.

உறவினர்களால் உடல்கள் கைப்பற்ரப்படாமல் இருப்பதற்கு 24 சதவிகித காரணம் இறுதிச்சடங்குகளுக்கான செலவுகள். 

ஆனால் ஒன்ராறியோ நிர்வாகம் தற்போது புதிய திட்டமொன்றை அமுலுக்கு கொண்டுவந்துள்ளது.

24 மணி நேரத்தில் ஒரு சடலம் கைப்பற்றப்படாமல் போனால், உற்றார் உறவினர்களை கண்டுபிடித்து, அவர்களின் நிலை அறிந்துகொண்டு, உள்ளூர் முனிசிபாலிட்டி நிர்வாகம் எளிய முறையில் இறுதிச்சடங்குகளை முன்னெடுக்கிறது.

மிட் டவுன் ரொறன்ரோவில் கல்லறை ஒன்றிற்கான செலவு 34,000 டொலர் வரையில் ஈடாக்கப்படுகிறது. 

இதில் கல்லறையை திறப்பது மற்றும் மூடுவது, இறுதிச்சடங்குகள், வரி மற்றும் பிறப்பொருட்களுக்கான செலவுகள் உட்படுத்தப்படவில்லை.

பொதுவாக இறுதிச்சடங்குகளுக்கு மட்டும் தற்போது 2,000 முதல் 12,000 டொலர் வரையில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

சமீப ஆண்டுகளில் வசதி வாய்ப்புகள் இல்லாத மக்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை கைப்பற்றி இறுதிச்சடங்குகளை நடத்த முடியாமல் உள்ளனர்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்