Paristamil Navigation Paristamil advert login

கனரக வாகங்கள் மீதான கட்டுப்பாடு நீக்கம்!

கனரக வாகங்கள் மீதான கட்டுப்பாடு நீக்கம்!

7 சித்திரை 2024 ஞாயிறு 15:48 | பார்வைகள் : 7641


தலைநகர் பரிஸ் மற்றும் இல் து பிரான்ஸ் முழுவதும் கனரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், இந்த ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலத்தின் போது தளர்த்தப்பட உள்ளன.

சனிக்கிழமைகளில் அல்லது பொது விடுமுறை நாட்களில் இரவு 10 மணிவரை 7.5 தொன் எடைக்கு மேற்பட்ட கனரக வாகனக்கள் வீதிகளில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த தடையே தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலத்தில் அதற்கு தேவையான பொருட்கள், உணவு பொருட்கள், உணவுக் கழிவுகள் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் இனி கட்டுப்பாடின்றி பயணிக்க முடியும்.

வார இறுதி நாட்களில் 24 மணிநேரமும் பயணிக்க முடியும். ஆனால் குறித்த வாகனம் ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றிச் செல்ல வேண்டும். அவை காவல்துறையினரால் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மே 1 ஆம் திகதியில் இருந்து ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது. இத்தகவல் இன்று ஏப்ரல் 7, அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்