Viry-Châtillon : குழு மோதலில் 15 வயது சிறுவன் படுகாயம்!
.jpg)
4 சித்திரை 2024 வியாழன் 18:33 | பார்வைகள் : 9899
Viry-Châtillon (Essonne) நகரில் இடம்பெற்ற குழு மோதல் சம்பவம் ஒன்றில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஏப்ரல் 4, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் பாடசாலைக்கு அருகே நடந்து சென்றபோது, அவரை சுற்றி வளைத்த ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் சிறுவன் மீட்கப்பட்டு பரிசில் உள்ள Necker மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.