சென் நதிக்குள் இருந்து நான்கு வயது சிறுமியின் சடலம் மீட்பு!
.jpg)
4 சித்திரை 2024 வியாழன் 18:24 | பார்வைகள் : 11590
சென் நதியில் இருந்து நான்குவயது சிறுமி ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் இன்று ஏப்ரல் 4 ஆம் திகதி வியாழக்கிழமை மீட்டுள்ளனர்.
Andrésy (Yvelines) நகரினை ஊடறுக்கும் சென் நதியில் இருந்து காலை 11 மணிக்கு இச்சடலம் மீட்கப்பட்டது. சிறுமி ‘டெனிம்’ காற்சட்டை மற்றும் ரி.சேர்ட் அணிந்திருந்ததாகவும், கடந்த இரண்டுமணிநேரங்களுக்கு மேலாக சிறுமி தண்ணீருக்குள் மூழ்கியிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூறு பரிசோதனைகளுக்காக சடலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணும் முயற்சியும் இடம்பெற்று வருகிறது.
குறித்த சிறுமி தொடர்பில் அப்பகுதியில் எவரும் காவல்துறையினருக்கு தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை என அறிய முடிகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025