Seine et Marne : A5 நெடுஞ்சாலையில் கோர விபத்து! - ஒருவர் பலி, மூவர் காயம்!!

4 சித்திரை 2024 வியாழன் 18:09 | பார்வைகள் : 10417
ஏப்ரல் 2, செவ்வாய்க்கிழமை A5 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Seine-et-Marne மாவட்டத்தின் வடக்கு பகுதியான Fresnes-sur-Marne இனை ஊடறுக்கும் நெடுஞ்சாலையில் பயணித்த Citroën C4 Picasso மகிழுந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு பாய்ந்தது. எதிரே பயணித்த மகிழுந்தை இடித்து தள்ளி விபத்தை ஏற்படுத்தியது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றது.
விபத்துக்குள்ளான மகிழுந்துக்குள் இருந்து அதன் சாரதி (வயது 28) சடலமாக மீட்கப்பட்டார்.
அதேவேளை, விபத்தில் சிக்குண்ட மற்றுமொரு மகிழுந்தில் பயணித்த 33, 37 மற்றும் 40 வயதுடைய மூவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025