Fontainebleau வனத்துக்குள் தரையிறங்கிய உலங்குவானூர்தி!!

4 சித்திரை 2024 வியாழன் 18:01 | பார்வைகள் : 10199
Fontainebleau காட்டுக்குள் உலங்குவானூர்தி ஒன்று தரை இறங்கி, காயமடைந்த ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.
கடந்த மார்ச் 30, சனிக்கிழமை குறித்த காட்டுப்பகுதிக்கு சுற்றுலாவந்தவர்களில் பெண் ஒருவர் காயமடைந்து நடக்க முடியாமல் போயுள்ளது. அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு உலங்குவானூர்தி அழைக்கப்பட்டது.
காட்டுப்பாதைக்குள் நோயாளர் காவுவண்டி பயணிப்பது சிரமம் என்பதால் அங்கு உலங்குவானூர்தி அழைக்கப்பட்டிருந்தது.
குறித்த Fontainebleau காட்டுப்பகுதிக்குள் உள்ள des 25 bosses எனும் மலைப்பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டு, குறித்த பெண்ணுக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டிருந்தது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025