Plessis-Bouchard : மின்சார ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர் - விபத்தில் படுகாயம்!!

3 சித்திரை 2024 புதன் 14:53 | பார்வைகள் : 8315
மின்சார ஸ்கூட்டரில் (trottinette électrique) பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஏப்ரல் 1 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இவ்விபத்து Plessis-Bouchard (Val-d'Oise) நகரில் இடம்பெற்றுள்ளது.
இரவு 11 மணி அளவில் rue Pasteur வீதியில் பயணித்த ஒருவர் தலைக்கவசம் அணிந்திராத ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார். 45 வயதுடைய குறித்த சாரதி மூளைச்சாவு அடைந்து உயிருக்காபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் சிக்கியது எப்படி என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சம்பவத்தை நேரில் கண்டவர்களை காவல்துறையினர் அழைத்துள்ளனர்.
அதேவேளை, விபத்து இடம்பெற்ற இடத்தில் கண்காணிப்பு கமராக்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025