பிரெஞ்சு குடியுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட நபர்!
31 பங்குனி 2024 ஞாயிறு 15:27 | பார்வைகள் : 14829
மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவரது குடியுரிமை பறிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். Rachid Aïd El Hadj எனும் குறித்த நபர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு Rachid Aïd El Hadj மற்றும் அவருடைய சகாக்கள் என மொத்தமாக நால்வருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டு மொராக்கோவின் Casablaca நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும், 45 பேர் கொல்லப்படுவதற்கு காரணமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில், அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டதுடன்,, அவரது பிரெஞ்சுக் குடியுரிமை பறிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். மீதமான மூவருக்கும் சிறைத்தண்டனைக் காலம் நிறைவடைந்ததும் அவர்களும் வெளியேற்றப்படுவார்கள் என அறிய முடிகிறது.
“காவல்துறையினர், உளவுத்துறையினர், ஜொந்தாமினர் அனைவருக்கும் எமது நன்றிகள். நாங்கள் பிரெஞ்சு மக்களை பாதுகாக்க மிகவும் கடுமையாக போராடுகிறோம்.” என உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan