Paristamil Navigation Paristamil advert login

டேனியல் பாலாஜியின் பதற வைக்கும் இறுதி தருணம்!

டேனியல் பாலாஜியின் பதற வைக்கும் இறுதி தருணம்!

30 பங்குனி 2024 சனி 10:25 | பார்வைகள் : 2965


திருவான்மியூரில் வசித்து வந்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது. டேனியல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் என்ன நடந்தது என்பது குறித்து அவரது உறவினர்கள் ஊடகத்திற்கு பேட்டிக் கொடுத்துள்ளனர்.

டேனியல் பாலாஜியின் சகோதரர் ஒருவர் கூறுகையில், “நேற்று இரவு எட்டு மணியளவில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனே நண்பர்களோடு சேர்ந்து அவரே மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டதை உறுதி செய்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்து பார்த்தனர். ஆனால், அது எதுவும் பலனளிக்கவில்லை. பத்து மணியளவில் அவர் இறந்ததை எங்களுக்கு மருத்துவர்கள் தெரிவித்தனர். தான் இறந்தாலும் தன் கண்கள் இன்னொருவருக்குப் பயன்பட வேண்டும் என்று விருப்பப்பட்டார். அதனால் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது” என்றார்.

48 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத டேனியல் பாலாஜிக்கு திரைத்துறையில் இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் விருப்பமாம். நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில் முரளி, லைலா நடித்த 'காமராசு' படத்தில் உதவி இயக்குநராக முதன்முதலில் பணிபுரிந்து, திரையுலகில் நுழைந்தார். ஆனால், காலம் அவரை நடிகராகவே அழகு பார்த்தது.

கடைசி வரை இயக்குநராக வேண்டும் என்ற டேனியல் பாலாஜியின் விருப்பம் நிறைவேறாமல் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்