'தலைவர் 171' குறித்து லோகேஷ் கனகராஜ்..!
30 பங்குனி 2024 சனி 09:36 | பார்வைகள் : 2777
ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், இந்த படம் குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளார்
ரஜினி அவர்களை இதற்கு முன்பு நாம் பார்த்திருக்காத வகையில் இந்த படத்தில் பார்ப்போம். அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம் என்று கூறிய லோகேஷ் கனகராஜ் இது 100% என்னுடைய படம்தான் இன்று தெரிவித்துள்ளார். மேலும் பர்ஸ்ட் லுக்கில் கடிகாரங்கள் இருப்பதை இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை சமூக வலைதளங்களை கூறி வருகிறார்கள், ஆனால் நாங்கள் வேற மாதிரி ஒன்றை எழுதி வைத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்
இந்த நிலையில் இதே மேடையில் பேசிய ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் சகோதரர்கள் சினிமா மட்டுமே எங்கள் உலகமாக உள்ளது, ஒரே நேரத்தில் கமல் சார், ரஜினி சார் படம் பண்ணுவது என்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது, எங்களுக்கு இப்போது ஒரே குறிக்கோள் இந்த படங்களுக்கு எல்லாம் சிறந்த அவுட்புட் கொடுக்க வேண்டும் என்பதுதான்’ என்று தெரிவித்தனர்.