Paristamil Navigation Paristamil advert login

ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன் - கமல்ஹாசன்

ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன் -  கமல்ஹாசன்

28 பங்குனி 2024 வியாழன் 15:02 | பார்வைகள் : 3001


தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர்  கே.இ. பிரகாஷுக்கு  உதய சூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் நாளை பரப்புரையைத் தொடங்க உள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி  தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க. என தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்