கனடாவில் புதிய வரி அறிமுகம் - மருத்துவர்களுக்கு பாதிப்பு
23 சித்திரை 2024 செவ்வாய் 08:49 | பார்வைகள் : 5897
கனடாவில் புதிய வரி நடைமுறைகளினால் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
தங்களது ஓய்வூதிய சேமிப்பு இந்த புதிய வரி நடைமுறையினால் பாதிக்கும் என சில குடும்ப மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்ப மருத்துவர்களுக்கு ஓய்வூதியம், ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் காப்புறுதி கிடைக்கப் பெறுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
தாங்காளவே சேமிப்பு செய்ய வேண்டியிருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கனடிய அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் மூலதன ஆதாய வரியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வரித் திட்டத்தினால் தங்களது சேமிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என குடும்ப மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan