Paristamil Navigation Paristamil advert login

தைவானில் 9 நிமிடங்களில் 5 நிலநடுக்கங்கள் பதிவு! அதிர்ச்சியில் மக்கள்

தைவானில் 9 நிமிடங்களில் 5 நிலநடுக்கங்கள் பதிவு! அதிர்ச்சியில் மக்கள்

23 சித்திரை 2024 செவ்வாய் 08:54 | பார்வைகள் : 2000


தைவான் - கிழக்குப் பகுதியில் 9 நிமிடங்களுக்குள் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ஹுவாலியன் கவுண்டியில் உள்ள ஷோஃபெங் டவுன்ஷிப்பில் இடம்பெற்றுள்ளது.

2 வாரங்களுக்கு முன்பு, ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் தைவானின் கிழக்குக் கரையை உலுக்கியது.

இதில் 04 பேர் உயிரிழந்ததுடன் 700 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தற்போது 05 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்