மத்திய ஆபிரிக்க ஆற்றில் கவிழ்ந்து படகு விபத்து - 58 பேர் பலி

21 சித்திரை 2024 ஞாயிறு 11:38 | பார்வைகள் : 6630
மத்திய ஆபிரிக்காவில் ஆற்றில் 300 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய ஆபிரிக்கா தலைநகரான பாங்குவில் வசிக்கும் மக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல ஆற்றை கடக்கும் முறையே உள்ளது.
இந்நிலையில் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு செல்ல படகில் சுமார் 300 பேர் ஆற்றை கடக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கி 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீதமுள்ள 200 இற்கும் மேற்பட்டோர் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து நிலைமையை உணர்ந்த உள்ளூர் கடற்றொழிலாளர்கள் தங்கள் படகுகள் மூலம் மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படகு கவிழ்ந்த விபத்தில் 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3