Paristamil Navigation Paristamil advert login

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ஐந்து வயது மகளை இழந்த தாய்க்கு உளவியல் பாதிப்பு - செவிப்புலன் பாதிக்கப்பட்டதால் வேலை இழப்பு - மறக்கப்பட்ட மலையக மக்களின் வலிகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ஐந்து வயது மகளை இழந்த தாய்க்கு உளவியல் பாதிப்பு - செவிப்புலன் பாதிக்கப்பட்டதால் வேலை இழப்பு - மறக்கப்பட்ட மலையக மக்களின் வலிகள்

21 சித்திரை 2024 ஞாயிறு 11:15 | பார்வைகள் : 1085


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பலவயதுடையவர்கள் பல தேசிய இனங்களை சேர்ந்தவர்கள் பல பொருளாதார நிலையை கொண்டவர்களின் உயிர்களை பறித்தது.

 மக்கள் அதிகளவில் செல்லும் பகுதிகள் இலக்குவைக்கப்பட்டமையே இதற்கு காரணம் 

மிகவும் பிரபலபமான நன்கறியப்பட்ட டென்மார்க் கோடீஸ்வரரும் பெஸ்ட்செல்லரின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஹெல்ச் பொவ்ல்செனின் பிள்ளைகள் உட்பட ( சுற்றுலாப்பயணிகள் ) உட்பட கிறிஸ்தவ தேவலாயத்திற்கு சென்ற பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

பலியானவர்கள் குறித்தும் உயிர்பிழைத்தவர்கள் குறித்தும் பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதுடன் ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ள போதிலும் உயிர்த்த ஞாயிறுதாக்குதலினால் பாதிக்கப்பட்ட- மறக்கப்பட்ட ஒரு சமூகமாக இலங்கையின் மலையகதமிழர்கள் காணப்படுகின்றனர்.

இலங்கையின் மலையகபகுதிகளில் வாழும் இந்த மக்களுக்கு சமூகத்தினால் மறக்கப்படுவதும் ஒதுக்கிவைக்கப்படுவதும் புதிய விடயமல்ல.

மலையகதோட்டங்களில் வேலைபார்ப்பதற்காக  பிரிட்டனின் ஆட்சியாளர்களால் இவர்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு 200 வருடங்களாகின்ற போதிலும் அவர்களின்  வாழ்க்கையும் தற்போதைய நிலைமையும் இன்னமும் முன்னேற்றமடையவில்லை.

காலனித்துவ காலத்தில் அடிமைத்தனத்தின் ஒரு பகுதியாக ஆரம்பித்த வாழ்க்கை போராட்டமும் சமத்துவம் இன்மையும் இன்றுவரை தொடர்ந்துள்ளது அந்த சமூகத்தினரின் வாழ்க்கையை இன்றுவரை பாதிக்கின்றது.

சமூக பாரபட்சம் ,இலங்கையின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களாக காணப்படுதல், பொருளாதார நெருக்கடிகள் ,அரசியல்ரீதீயாக அங்கீகாரம் பெறுவதில் உள்ள  சவால்கள், பிரஜாவுரிமை மற்றும் ஏனைய உரிமைகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் மத்தியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் காரணமாக இந்த சமூகத்தை சேர்ந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் மலையக பகுதிகள் தாக்கப்படவில்லை என்கின்ற போதிலும் இந்த பகுதிகளை சேர்ந்த பலர் கொழும்பில் தொழில்புரிந்துவந்தனர் அல்லது கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தனர்  கொழும்பு கொச்சிக்கடை சென் அந்தனீஸ் தேவாலயத்திற்கு சென்றிருந்தனர்.

பேரழிவை ஏற்படுத்திய குண்டுதாக்குதலினால் பலர்தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தனர் இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் சிலர் குடும்பத்திற்கு வருமானம் ஈட்டிக்கொடுப்பவர்களாக காணப்பட்டவர்கள்.

இழப்பு காரணமாக ஏற்பட்டுள்ள உளவியல் பாதிப்புகளிற்குஅப்பால் மலையக சமூகத்தின் பல குடும்பங்களின் நிதிசார்ந்த தேவைகளையும் இது அதிகரித்துள்ளது பெரும்தேவை எழுந்துள்ளது.

செத்செரன உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கு வீடுகளை வழங்கியுள்ளது.

எனினும் இந்த வீடுகள் கொழும்பில் காணப்படுவதால் சிலர் அதுவரை காலமும் தாங்கள் வாழ்ந்துவந்த வாழ்க்கையையும் வேலைகளையும்  கைவிட்டுவிட்டு வேறு பகுதிக்கு சென்று புதிய வேலைகளில் ஈடுபடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொழும்பில் தங்கள் பிள்ளைகளிற்கு பாடசாலை கல்வியை வழங்குவது மிகவும் செலவுமிகுந்த விடயம் என்பதால் சிலர் தங்கள் பிள்ளைகளையும் குடும்பத்தவர்களையும்; விட்டுவிட்டு புதிய இடங்களிற்கு செல்லவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.'

வதனி ( பெயர் மாற்றப்ட்டுள்ளது )- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக தனது கணவரை இழந்தார். உயிரிழக்கும் வரை இவர்கள் கணவரின் வருமானத்தையே நம்பியிருந்தனர் - இதன் காரணமாக அவர் மூன்று பிள்ளைகளுடன் விதவையானார்.

வருமானத்திற்கான நிரந்தர வழியில்லாத சூழ்நிலையில் அவர் தனது கணவரின் குடும்பத்தவர்கள் உட்பட முழு குடும்பத்திற்கும் உணவளிக்கவேண்டிய சுமையை சுமக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

அவருக்கு கொழும்பில் புதிய வீடொன்றை வழங்கியுள்ளனர்.  - அவர் கொழும்பில் தொழில்புரிகின்றார் பிள்ளைகள் மலையகத்தில் கணவரின் குடும்பத்தினரின் பராமரிப்பில் வளர்கின்றனர்.

தான் உழைக்கும் பணத்தை அவர் மலையகத்திற்கு அனுப்புகின்றார்.

தங்கள் குழந்தைகளை இழந்த அதிர்ச்சியினால் உளவியல் பாதிப்புகளை எதிர்கொண்டவர்களும் உள்ளனர் .அவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய மருத்துவ உதவிகளை பெற முடியாத நிலையில் உள்ளனர்.தாங்கள் உழைக்கின்ற அல்லது கிடைக்கின்ற பணத்i உணவு மின்சாரம் பிள்ளைகளின் கல்விபோன்றவற்றி;ற்கு செலவிடவேண்டிய நிலையில் உள்ளனர்.

ஜோன் -( பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆறுபேர் கொண்ட குடும்பத்திற்காக உழைத்துவந்த ஒரேயொரு நபர் - தனது ஐந்து வயது மகளை இழந்தார் - இந்த அதிர்ச்சியால் மனைவி உளவியல்ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் தனது பிள்ளைகளை விட்டுவிட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றார்.

இதன் காரணமாக  அவர்களிற்கு உரிய இருப்பிடம் உட்பட அடிப்படை வசதிகளை வழங்க முடியாத நிலையில் அவர் காணப்படுகின்றார்.

மருத்துவ செலவுகள் காரணமாகவும் காயங்களுடன் வாழவேண்டியுள்ளதாலும் மலையக சமூகத்தை சேர்ந்த கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளனர்

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்காரணமாக ஆகாசின் செவிப்புலன் பாதிக்கப்பட்டது மருத்துவர்கள் சத்திரசிகிச்சை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் எனினும் இதற்கு மூன்று இலட்சம் செலவாகும்.மேலும் அவர் மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்கவேண்டியிருக்கும்.

இதனால் அவர் மூன்றுமாத வருமானத்தை இழக்கவேண்டியிருக்கும் இது அவரது குடும்பத்தினரை மோசமாக பாதிக்கும்.

இதனால் அவர் அந்த சத்திரசிகிச்சையை நீண்டநாட்கள் ஒத்திவைத்தார்.

எனினும் சிலரின் உதவியுடன் அதிஸ்டவசமாக அவர் சத்திரசிகிச்சை செய்துகொள்வதற்காக வாய்ப்பு கிடைத்தது.ஆனால் அவர் இன்னமும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளார் - மருத்துவர்கள் மீண்டும் சத்திரசிகிச்சை அவசியம் என தெரிவித்துள்ளனர்.

அவர் இன்னமும்சிறிய வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். வாடிக்கையாளர்கள் தெரிவிப்பதை முழுமையான கேட்க முடியாத நிலையில் காணப்படுகின்றார்.

இதன் காரணமாக அவர் தனது வேலையை விட்டுவிட்டார் - தற்போது வேலையின்றி துயரத்தில் சிக்குண்டுள்ளார்.


நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்