இலங்கையை வந்தடைந்தார் இசைஞானி இளையராஜா!
19 சித்திரை 2024 வெள்ளி 11:42 | பார்வைகள் : 3679
பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இன்று இலங்கை வந்தடைந்தார்.நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) கொழும்பில் இடம்பெறவுள்ள மாபெரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
முன்னதாக குறித்த இசை நிகழ்ச்சி கடந்த ஜனவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த நிலையில், இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.