Paristamil Navigation Paristamil advert login

ஓட்டு போட வந்த விஜய்யை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

ஓட்டு போட வந்த விஜய்யை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

19 சித்திரை 2024 வெள்ளி 11:36 | பார்வைகள் : 7253


தளபதி விஜய் சற்றுமுன் ஓட்டு போட வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் அவர் கையில் உள்ள காயத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய், ரஷ்யா சென்று இருந்த நிலையில் அவர் ஓட்டு போடுவதற்காக நேற்று ரஷ்யாவில் இருந்து கிளம்பியதாகவும் ஆனால் அதே நேரத்தில் அவர் துபாயில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

துபாயில் பெய்த கனமழை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விஜய்யின் சென்னை வருகை கேள்விக்குறியாக இருந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் சென்னை திரும்பினார் என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சென்ற நிலையில் அவர் வாக்கு சாவடிக்கு சென்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் விஜய்யின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது ரஷ்யாவில் நடந்த ‘கோட்’ படப்பிடிப்பில் பைக் சேஸிங் காட்சியின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்