Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்தியவரை மன்னித்துவிட்டேன் -  மதகுரு

அவுஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்தியவரை மன்னித்துவிட்டேன் -  மதகுரு

18 சித்திரை 2024 வியாழன் 08:58 | பார்வைகள் : 7497


அவுஸ்திரேலியாவின் சிட்னி தேவாலயத்தில் தன் மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை மன்னித்துள்ளதாக ஆயர் மரி மார் இமானுவேல் தெரிவித்துள்ளார்.

அதோடு இந்த தாக்குதலிற்கு பழிவாங்கும் விதத்தில் செயற்படவேண்டாம் - இயேசுவை போல நடந்துகொள்ளுங்கள் என ஆயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான ஆயர் மருத்துவமனையிலிருந்தபடி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

தனது வேகமாக குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ள அவர் தன்னை தாக்கியவருக்காக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவரை நான் மன்னிக்கின்றேன் நீங்கள் எனது மகன் நான் உங்களை நேசிக்கின்றேன் உங்களுக்காக நான் பிரார்த்திக்கின்றேன் என தெரிவிப்பதாக ஆயர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தனது ஆதரவாளர்கள் பதில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பதில் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும் என அவர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கவலைப்படவேண்டிய கரிசனை கொள்ளவேண்டிய தேவையில்லை கர்த்தர் எங்களிற்கு போரிடவே பதில்நடவடிக்கையில் ஈடுபடவோ கற்றுத்தரவில்லை எனவும் மதகுரு தெரிவித்துள்ளார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்