ஜப்பானில் கரடிகளை அழிக்க அனுமதி..!
18 சித்திரை 2024 வியாழன் 08:53 | பார்வைகள் : 3924
ஜப்பானில் அரசாங்க மானியத்தின் உதவியுடன் வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளையும் சேர்த்துள்ளது.
ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சக தகவலின்படி,
2023 ஆம் ஆண்டில் 19 மாகாணங்களில் கரடிகள் தாக்கியதில் 219 பேர் பாதிக்கப்பட்டதாகவும்,
கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளைத் தவிர, பிற கரடிகள் 'வனவிலங்கு மேலாண்மை' பட்டியலில் சேர்க்கப்படும் என ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
கருப்பு கரடிகளின் எண்ணிக்கை பெருகவில்லை என்பதால் இந்த பட்டியலில் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுப்பு நிற கரடிகள் வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோவில் வாழ்கின்றன.
ஆசிய கருப்பு கரடிகள் ஜப்பானில் உள்ள 47 மாகாணங்களில் 33 மாநிலங்களில் வாழ்கின்றன.
அவற்றின் எண்ணிக்கை மற்றும் வாழ்விடங்கள் பல பகுதிகளில் அதிகரிக்கின்றன.