யாழ். பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு
16 ஆடி 2023 ஞாயிறு 09:51 | பார்வைகள் : 9516
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ‘மொபைல் வீடியோ கேம்’க்கு அடிமையாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே மொபைல் வீடியோ கேம் விளையாட்டில் ஆர்வமாக இருந்துவந்த நிலையில், நேற்று சனிக்கிழமை (15) தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புஷ்பராஜா எழில்நாத் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெற்றோருக்கு ஒரே மகனான இவர், வீட்டில் யாரும் இல்லாது தனிமையில் இருந்தபோது இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரிய வருகிறது.
இந்த மாணவர் மொபைல் வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையான நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக உத்தரவிட்டார்.
அதன் பின்னர் குறித்த இளைஞரின் சடலம் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan