Seine-Saint-Denis : 13 தொன் எடையுள்ள சிகரெட் பெட்டிகள் பறிமுதல்! - ஒன்பது பேர் கைது!
10 சித்திரை 2024 புதன் 16:12 | பார்வைகள் : 4215
Pavillons-sous-Bois ( Seine-Saint-Denis ) நகரில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு ஒன்றில் 13 தொன் எடையுள்ள சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த சிகரெட் பெட்டிகள் அவையாகும்.
ஏப்ரல் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள சேமிப்பு கிடங்கு ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து சிகரெட் பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 2.5 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஒன்பது ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.