கயிற்றில் பிடித்து ஈஃபிள் கோபுரத்தில் ஏறி - உலக சாதனை!!

10 சித்திரை 2024 புதன் 10:32 | பார்வைகள் : 9078
கயிற்றில் பிடித்து ஈஃபிள் கோபுரத்தில் ஏறி சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. சாதனையாளர் Anouk Garnier இந்த சாதனையை நேற்று ஏப்ரல் 9, செவ்வாய்க்கிழமை நிகழ்த்தியிருந்தார்.
தரையில் இருந்து 110 மீற்றர் உயரமுடைய ஈஃபிள் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் கயிறு மூலம் ஏறியுள்ளார். உச்சியில் கட்டப்பட்ட கயிற்றினை பிடித்து அதன் வழியாகவே ஏறியுள்ளார்.
இதற்கு முந்தைய சாதனையாக முதலாவது தளம் வரையிலேயே அவர் ஏறியிருந்தார். இந்நிலையில், இந்த புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஒலிம்ப் போட்டிகளுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், இந்த சதனை பதியப்பட்டுள்ளது.