Paristamil Navigation Paristamil advert login

நவிகோ அட்டை இனிமேல் ஐபோன்களிலும்...!!

நவிகோ அட்டை இனிமேல் ஐபோன்களிலும்...!!

9 சித்திரை 2024 செவ்வாய் 15:50 | பார்வைகள் : 12235


இதுவரை Android தொலைபேசிகளில் மட்டுமே இயங்கி வந்த  நவிகோ பயண அட்டை, மிக விரைவில் ஐபோன் தொலைபேசிகளிலும் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Android தொலைபேசிகளை விடவும், iPhone தொலைபேசிகளுக்கு  செயலியை வடிவமைப்பதில் பல சிரமங்கள் இருந்துள்ளன. மேலதிகமான தொழில்நுட்பங்கள் தேவைப்பட்டிருந்தது. ஆப்பிள் நிறுவனம் தங்களது தொலைபேசிகளில் உள்ள NFC தொழில்நுட்பத்தை பிற சாதனங்களில் பயன்படுத்த கட்டுப்பாடு கொண்டுவந்திருந்தது. இந்நிலையில் Île-de-France Mobilités நிறுவனம் அப்பிள் நிறுவனத்துடன் கலந்துரையாடி இந்த செயலிக்கு உயிர் கொடுத்துள்ளது. 

இந்நிலையில், தற்போது இந்த சேவை தயாராக இருப்பதாகவும், விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரான்சில் பெருமளவான இளைஞர்கள் ஐபோன்களே பயன்படுத்துகின்றார்கள். இதனால் நவிகோ பயன்படுத்துவது அவர்களுக்கு மிக எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்