Bercy தொடருந்து நிலையத்துக்கு அருகே இருந்த அகதிகள் கூடாரங்கள் அகற்றம்!
26 மாசி 2024 திங்கள் 18:38 | பார்வைகள் : 3707
Bercy தொடருந்து நிலையத்துக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த சிறிய கூடாரங்கள் காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது அகதிகள் எவரும் அங்கு இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இன்று பெப்ரவரி 26 ஆம் திகதி திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றது. காவல்துறையினர் மற்றும் அகதிகளுக்கான தொண்டு நிறுவனமான Utopia 56 உறுப்பினர்கள் இணைந்து இந்த கூடாரங்களை அகற்றினர்.
மொத்தமாக 17 கூடாரங்கள் அகற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் 30 கூடாரங்கள் அகற்றப்பட்டதாக Utopia 56 அமைப்பினர் தெரிவித்தனர்.
பரிசில் தங்குமிடங்கள் அற்று வீதிகளில் 12,000 அகதிகள் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.