Paristamil Navigation Paristamil advert login

Digital Nomad Visaவை அறிமுகப்படுத்தும் ஜப்பான்....

Digital Nomad Visaவை அறிமுகப்படுத்தும் ஜப்பான்....

26 மாசி 2024 திங்கள் 13:22 | பார்வைகள் : 4118


ஜப்பான் டிஜிட்டல் நாடோடி (Digital Nomad Visa) என்ற புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இத்திட்டம் 2024 மார்ச் இறுதிக்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசா திட்டம் ஒரு வெளிநாட்டவர் ஆறு மாதங்களுக்கு ஜப்பானில் எங்கும் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது.

இந்த விசா 49 நாடுகளின் குடிமக்கள் ஜப்பானில் தங்க அனுமதிக்கிறது.

ஆனால், இந்த 49 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

49 நாடுகளின் பட்டியலில் ஜப்பானுடன் வரி ஒப்பந்தங்கள் மற்றும் குறுகிய கால விசா தள்ளுபடி ஒப்பந்தங்கள் உள்ள நாடுகள் உள்ளன.

இந்த விசா திட்டத்தின் மூலம் இந்த நாடுகளில் டிஜிட்டல் நாடோடிகளை ஈர்ப்பதை ஜப்பான் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முக்கியமாக தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மிகவும் திறமையான நிபுணர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

ஜப்பானின் டிஜிட்டல் நாடோடி விசாவைப் பெற, ஒரு நபரின் ஆண்டு வருமானம் 10 மில்லியன் ஜப்பானிய யென் (இலங்கை பணமதிப்பில் ரூ. 2.06 கோடி) அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சுகாதார காப்பீடு பெற்றிருக்க வேண்டும். 

இந்த விசாவில் வாழ்க்கைத் துணைவர்களும் குழந்தைகளும் ஜப்பானுக்குச் செல்லலாம்.

டிஜிட்டல் நாடோடி விசா வைத்திருப்பவர்கள், அரசு சலுகைகளைப் பெறுவதற்கான குடியிருப்பு அட்டை அல்லது சான்றிதழைப் பெற முடியாது.

மேலும் இந்த விசா புதுப்பிக்க முடியாதது. எனவே காலாவதி தேதிக்குப் பிறகு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

50க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது டிஜிட்டல் நாடோடி விசாக்களை (DNV) வழங்குகின்றன. ஆனால் தங்கும் காலம் மாறுபடும்.

உதாரணமாக, தென் கொரியா இந்த விசாவின் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை தங்குவதற்கு அனுமதிக்கிறது. தைவான் மூன்று ஆண்டுகள் வரை அனுமதிக்கிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்