Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டம்!

இலங்கையில் சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டம்!

26 மாசி 2024 திங்கள் 13:39 | பார்வைகள் : 2763


இலங்கையில் சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இலகுவில் அடையாளம் காணும் நோக்கில் இந்த புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நபர் மற்றும் குடும்பங்களின் தகவல்கள், வசிக்கும் இடம், தேசிய அடையாள அட்டை எண், கிராம அலுவலர் பிரிவு போன்ற தகவல்களை உள்ளடக்கிய படிவத்தை பூர்த்தி செய்து தமது வசிப்பிடத்துக்கு உரிய பொலிஸ் நிலையத்தில் கையளிக்க அறிவுறுத்தப்படவுள்ளனர்.

குறிப்பாக யாரேனும் ஒருவர் தற்போதைய வசிப்பிடத்துக்கு உரிய பொலிஸ் பிரிவை விட்டு வேறொரு பொலிஸ் பிரிவுக்கு உரிய பிரதேசத்துக்கு வசிப்பிடத்தை மாற்றும் சந்தர்ப்பத்தில், அது தொடர்பாக கிராம சேவை அதிகாரியின் பரிந்துரையுடன் பொலிஸ் நிலையத்துக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும் என பொது மக்களை வலியுறுத்தவும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்