Paristamil Navigation Paristamil advert login

பிரதமரை சீண்டிய மரீன் லூ பென்! விவாதத்துக்கு தயார் என்கிறார் கேப்ரியல் அத்தால்!

பிரதமரை சீண்டிய மரீன் லூ பென்! விவாதத்துக்கு தயார் என்கிறார் கேப்ரியல் அத்தால்!

21 மாசி 2024 புதன் 10:51 | பார்வைகள் : 17129


மரீன் லு பென்னின் கருத்துக்கள் பிரதமர் கேப்ரியல் அத்தாலை சீண்டியுள்ளது. அவரை பொது விவாதத்துக்கு அழைத்துள்ளார்.

விவசாயிகள் போராடம் நாடு முழுவதும் விவசாயிகள் போராடம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்த, அரசு அறிவிக்கும் சலுகைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மீது மீது Rassemblement National கட்சி உறுப்பினர் மரீன் லூ பென் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனால் கோபமடைந்த பிரதமர் கேப்ரியல் அத்தால், நேற்று பெப்ரவரி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து அதற்கு பதிலளித்தார். “அரசியல் சூழ்ச்சிக்கு பணயக்கைதியாக இருக்க முடியாது.  இது ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தும் இடம் அல்ல" என அவர் தெரிவித்தார். கருத்துக்கள் வெளியிடுவதை விட, பொது விவாதத்தில் ஈடுபடலாம். நான் விவாதத்துக்கு தயார்' எனவும் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்