◉ மூன்றாவது நாளாக மூடப்பட்டுள்ள ஈஃபிள் கோபுரம்!
21 மாசி 2024 புதன் 14:00 | பார்வைகள் : 3544
ஈஃபிள் கோபுர ஊழியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது.
இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஈஃபிள் கோபுரத்தின் நிதி நிர்வாகம் மிகவும் மோசமாக இயங்குவதாகவும், கோபுரத்தில் உள்ள திருத்தப்பணிகளை விரைந்து மேற்கொண்டு தருமாறும் அவர்கள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று பெப்ரவரி 20 ஆம் திகதி இரு தரப்புக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததை அடுத்து இன்று மூன்றாவது நாளாக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது.