அனைத்து இலத்திரனியல் சாதனங்களுக்கும் ஒரே நிபந்தனைகளுடன் கூடிய chargeur!!
28 மார்கழி 2023 வியாழன் 16:56 | பார்வைகள் : 11307
பிரான்சில் 2024 ஆம் ஆண்டின் இறுதி முதல் விற்பனை செய்யப்படும் தொலைபேசிகள் மற்றும் அனைத்து இலத்திரனியல் சாதனங்களுக்கும் ஒரே போன்று சார்ஜர் இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Type C வகை சார்ஜர் மூலம் மின்னேற்றக்கூடியவாறு தயாரிக்கப்பட சாதனங்கள் மட்டுமே பிரான்சில் விற்பனை செய்ய முடியும் எனும் சட்டம் 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடைமுறைக்கு வருவதாக இன்று வெளியான அரச வர்த்தமானியில் (Journal Officiel) குறிப்பிடப்பட்டுள்ளது. தொலைபேசிகள், மடிக்கணணிகள், ப்ளூடூத் சாதனங்கள், iPad உள்ளிட்ட அனைத்து கருவிகளுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும்.
ஐபோன்களில் பயன்படுத்தப்படும் lightning cable மற்றும் Micro USB போன்ற மின்னேற்ற வழிகள் கொண்ட கருவிகளுக்கு விற்பனைத் தடை விதிக்கப்படும். எஞ்சியுள்ள சாதனங்களை விற்பனை செய்ய டிசம்பர் 28, 2024 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றம் கொண்டுவந்த இந்த நிபந்தனையை 2024 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan