Paristamil Navigation Paristamil advert login

 உக்ரைனுக்கு  ஆயுத உதவிகளை வழங்கும்  அமெரிக்கா

  உக்ரைனுக்கு  ஆயுத உதவிகளை வழங்கும்  அமெரிக்கா

28 மார்கழி 2023 வியாழன் 08:57 | பார்வைகள் : 6512


உக்ரைன் ரஷ்யாவிக்ரு இடையில் மோதல் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் மேலதிக இராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை இராணுவ உதவிக்கு என மேலதிகமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய போர் உதவிப் பொதியில் வான் பாதுகாப்பு வெடி பொருட்கள், பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான மோதல் கிட்டத்தட்ட இரண்டு வருடத்தை கடந்துள்ள நிலையில் இதுவரை உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது.

உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்குவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆரம்பத்தில் உறுதியளித்த போதும், அமெரிக்க உதவியின் எதிர்காலம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்