நகரசபைக் கட்டிடத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்! - வெளியேற்றம்!!

26 மார்கழி 2023 செவ்வாய் 10:42 | பார்வைகள் : 13899
Rouen நகரசபைக் கட்டிடத்துக்கு (l’hôtel de ville) வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இன்று டிசம்பர் 26, செவ்வாய்க்கிழமை காலை இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. மின்னஞ்சலூடாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் அழைக்கப்பட்டு நகரசபை ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் காவல்துறையினர் தேடுதல் மேற்கொண்டனர். இரண்டுமணிநேரத்துக்கும் மேலாக நகரசபை மூடப்பட்டிருந்தது.